உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரொஸ் அத்தனொம் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் கோவிட் வைரஸின் நிலை மற்றும் தடுப்பூசிக்கான பற்றாக்குறை ஆகியன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஸ்ரா செனகா தடுப்பூசியின் 2 ஆவது குப்பியை செலுத்துவதற்காக இலங்கைக்கு 6 லட்சம் குப்பிகள் தேவையென கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.
இதனை உலக சுகாதார அமைப்பின தலைவர் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அவசர தேவையின் நிமித்தம் சீனாவின் சினோபாம் தடுப்பூசிக்கு இன்னும் 2-3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்றும் இதனையடுத்து இலங்கையின் கையிருப்பிலுள்ள 6 லட்சம் குப்பிகளை இலங்கை மக்களுக்கு செலுத்த முடியும் என்ற விடயமும் பேசப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam