நெற்கதிர் என்றால் என்ன என்று தெரியாத ஜனாதிபதி!பிமல் ரட்நாயக்க சாடல் (VIDEO)
கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில், ஊரிலிருந்து தொடங்குவோம் என்னும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிமல் ரட்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள அரசாங்கமானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை வலுக்கட்டாயமாக தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது.
மேலும் இந்த நாட்டில் தற்போது பால்மா எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், இந்த கோட்டாபய அரசாங்கமானது தனது குடும்ப ஆட்சியை மேன்மேலும் அதிகரித்து இந்த நாட்டில் அராஜகம் புரிந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக பச்சை, நீலம் ,சிவப்பு என பார்த்தால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் ஒரு நெற்கதிர் என்றால் என்ன என்று தெரியாத ஜனாதிபதி தான் தற்போது விவசாய புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.
விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடி தான் சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் விவசாயியல்லாத விவசாயத் துறையை பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத்துறையினை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்.
எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றி நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri