அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலி சப்றி ஆற்றிய உரை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி
வெளிவிவகார அமைச்சர், பேரவையின் கூட்டத் தொடரில் ஆற்றிய உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன் ஒட்டு மொத்தமாக அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அலி சப்ரி பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்

இந்த நிலையில், அலி சப்ரியை தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என இதன்போது பேசப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அலி சப்ரிக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan