ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் ஊடக அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksa) தாம் தோல்வியடைந்ததாக குறிப்பிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாமும் தமது அமைச்சரவையும் பொதுமக்களின் முழு எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யவில்லை என்பதனையே ஜனாதிபதி கூறினார் என ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும (Dulas Alagaperuma) தெரிவித்துள்ளார்.
இந்த கூற்றை திரிபுபடுத்தி வேறும் அர்த்தப்படுத்தல்களை வெளியிடுவது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு 72 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு ஆற்றிய உரையில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை பூர்த்தி செய்யாமை குறித்து மக்கள் என் மீதும் அமைச்சரவையின் மீதும் அதிருப்தி அடைந்திருக்கலாம் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
குறைபாடுகளை ஒப்புக்கொள்வது அரசாங்கத்தின் முடிவாக எவரும் அர்த்தப்படுத்திவிட கூடாது என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
