தீர்மானம் எடுக்கும் கோட்டாபயவும் பசிலும்! அழிந்துவரும் அரசாங்கம்: கடுமையான எச்சரிக்கை
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணிக் கட்சிகள் மிக விரைவில் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் கூட்டணியில் இருக்கும் சகோதர கட்சிகளுக்கு பொருத்தமில்லாமல் இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஒரு வழியிலும் கூட்டணியில் இருக்கும் சகோதர கட்சிகள் அதற்கு முற்றிலும் புறம்பான தேசியவாத இடதுசாரி வழியிலும் பயணிக்கின்றன.
இந்த இரண்டு வழிப்பாதைகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதவை. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் போது மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அழித்து வருகிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்ட வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பது எதிராக செயற்படுவதாக அமையாது. பிரதமர் மகிந்த ராஜபக்சவும் செயற்பாட்டு ரீதியான பாத்திரத்தை வகிக்கவில்லை.
அரசாங்கத்தில் அனைத்து தீர்மானங்களையும் ஜனாதிபதியும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுமே எடுக்கின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri