இந்தியாவில் பெண்ணின் தலையில் ஏற்றப்பட்ட 77 ஊசிகள்: 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெண் ஒருவரின் தலையில் மாந்திரீகம் என்ற பெயரில் பூசகர் ஒருவர் டசன் கணக்கான ஊசிகளை ஏற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய ரேஷ்மா என்ற பெண்ணின் தலையிலேயே இவ்வாறு ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளது.
ஏற்றப்பட்ட 77 ஊசிகள்
தாயின் மறைவுக்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட குறித்த பெண், இது தொடர்பாக பூசகர் ஒருவரை நாடிய போதே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் பிறகு கடுமையான தலைவலியை அனுபவித்த பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் மருத்துவமனையை நாடியுள்ளார்.
இதன்போது, அவரது தலையில் 77 ஊசிகள் ஏற்றப்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்ததை தொடர்ந்து, பொலிஸார் குறித்த பூசகரை கைது செய்துள்ளதுடன் இதை போன்று வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
