அதிகரிக்கும் நெருக்கடி நிலை! மின்வெட்டு நீடிக்கப்படலாம்
எதிர்காலத்தில் மேலும் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சாரசபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் கட்டாயப் பராமரிப்புக்காக மீண்டும் மூடப்பட்டுள்ளதாலும், உதிரிப் பாகங்களைக் கொண்டு வருவதற்கு டொலர் கிடைக்காததாலும், நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு நிலவும் டொலர் தட்டுப்பாட்டாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தகவல்
எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிலக்கரி இருப்புகளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்த போதிலும், அவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான டீசல் இருப்பு இல்லாத பட்சத்தில் மின்வெட்டுக் காலம் நீடிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.