போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்
துறைமுக நகரமான “போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
“போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.
இந்தநிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டால் “போர்ட் சிட்டி”. இலங்கையின் பிரதேசசபை மற்றும் நகரசபைக்கு உட்படாமல் இலங்கையின் ஜனாதிபதி அமைக்கவுள்ள ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட நீதி மற்றும் நிதி அதிகாரங்கள்
வழங்கப்படவுள்ளமையால், போர்ட் சிட்டி எதிர்காலத்தில் சீனாவின் குடியிருப்பு
பகுதியாக மாறிவிடும் என்று ஜேவிபி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை
இங்கு குறிப்பிடத்தக்கது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan