நீண்டநாள் கசிப்பு உற்பத்தி நிலையத்தை அதிரடியாக சுற்றிவளைத்த பொலிஸார் - ஒருவர் கைது!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று(16.11.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
