தேசியப் பட்டியலின் ஊடாக அவைக்கு வரும் நாமல்
தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தோல்வி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
மேலும், இந்த தேர்தல் மக்கள் எடுத்த முடிவினை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், எங்களிடம் மாவட்ட அளவில் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களும், தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனமும் உள்ளது என்றும் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
