பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை அடக்குகின்றனர்! - மறுக்கும் அமைச்சர்
பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதாகக் கூறும் கூற்றுக்களை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, குற்றச்சாட்டு பொலிஸார் மீது அல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதே சுமத்தப்பட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது அரசியல் முடிவு அல்ல என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார சேவை பணிப்பாளர் அவ்வப்போது தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும் விதிகளையும் வெளியிட்டு வருவதாகவும், சில நாட்களுக்கு முன்பு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும் இதன்படி மேலும் அறிவிப்பு வரும் வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் போன்ற பொதுக் கூட்டங்களைத் தடைசெய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து அதன் மூலம் மக்களின் உரிமைகளை நசுக்குவதாக சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
