பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சுமார் மூன்று மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு பேருடன் இணைந்த பணத்தை கொள்ளையிட்ட பொலிஸ் சார்ஜன்ட்
பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மேலும் நான்கு பேர் இணைந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஏனைய நான்கு பேர் இணைந்து நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சுமை ஊர்தி ஒன்றை நிறுத்தி, அதில் இருந்த சுமார் 30 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பொலிஸ் சார்ஜனட் உட்பட ஏனைய நபர்கள் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.