இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் பொலிஸாரால் மீட்பு
இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் - உச்சிப்புளி அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்பு
இருமேனி பகுதியில் இருந்து முச்சக்கரவண்டியில் கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்படுவதாக வனத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் கொண்டுவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியொன்றையும், இருசக்கர வாகனமொன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.



