தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு
கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகித்த நிலையில், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து பதவிகளை இழந்துள்ள சுமார் 30 பேருக்கு கடந்த 15 மாதங்களாக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் முன்னாள் ஆளுநர்களும் உள்ளதாகவும் அவர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த இந்த அரசியல்வாதிகளுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் பிரிவின் இரண்டு பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரதான அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் நபர்கள் எனவும் தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத நபர்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
