ஹிசாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அதிகாரி! விரைவில் கைது?
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமி ஹிசாலினியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சிறுமியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ரிசாட் பதியுதீனின் மாமனார், குறித்த குறித்த பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பெடுத்து கூறியதாகவும் அதன்பின் பதியுதீன் வீட்டுக்குச் சென்ற அவர் சிறுமியின் பெற்றோருக்கு 50000 ரூபா பணம் வாங்கித் தருவதாகவும் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் ரிசாட் பதியுதீனின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியதாகவும் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan