பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
தேடப்படும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அங்கம் வகித்தவர்கள் தொடர்பிலே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கம்
இதன்படி, இந்த சந்திப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்படாத மற்றும் கைது செய்யத் தேடப்படும் சந்தேகநபர்கள் குழுவை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தக் குழு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0718591561 அல்லது குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி 0718594414 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
