பொடி மெனிக்கே புகையிரதம் இடைநடுவே நிறுத்தப்பட்டது : பயணிகள் ஆர்ப்பாட்டம் (Video)
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதம், புகையிரத சமிஞ்ஞை பிரச்சினை காரணமாக கொட்டகலை புகையிரத நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த புகையிரதத்தில் வந்த பயணிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதுடன், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை கொட்டகலை நகரில் மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்த சில மணித்தியாலங்களில் மீண்டும் அவர்கள் அவசரமாக மறுபடியும் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.
இதன்படி கொட்டகலை ரயில் நிலையம் மூடப்பட்டதன் காரணமாக கொழும்பு
கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதம் இன்று (14) மதியம்
12.45 அளவில் கொட்டகலையில் இடைநடவே நிறுத்தப்பட்டது.
இதனால் ஹட்டன் மற்றும் திம்புளை பத்தனை பொலிஸார் இணைந்து ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி கொட்டகலை புகையிரதம் நிலையம் வரை குறித்த புகையிரதத்தை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
மேற்படி நடவடிக்கையால் நீண்ட விடுமுறை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோரும், தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் தமிழ் மக்கள் என ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதனால் கடும் சிரமங்களுக்கும், பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
மேலும், ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலைமையை விளக்கி ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் இருந்து ஏழு பஸ்களில் ஊடாக நுவரெலியா மற்றும் பதுளை நகரங்களுக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.















இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022