மக்கள் அடிபட்டுச் சாகவேண்டிய நிலையில் உள்ளனர்: யாழ் மருந்து விற்பனையாளர்
மக்கள் அடிபட்டுச் சாகவேண்டிய நிலையில் உள்ளனர். யுத்த காலத்தில் கூட இப்படியில்லை என தனியார் மருந்து விற்பனையாளரொருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
யாழில் உள்ள தனியார் மருந்தகத்தின் உரிமையாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
''ஒருமாத காலமாக நாங்கள் மருந்து தட்டுப்பாட்டு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளோம்.நாளுக்கு நாள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளது. அதைவிட முக்கியமாக நிறைய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.
மருந்துகள் மாத்திரமின்றி பால்மா வகைகள், சவர்க்காரங்கள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
மருந்துகளின் விலை 30%தொடக்கம் 70% வரை விலைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறே செல்லுமாயின்
மக்கள் அடிபட்டுச் சாகவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.யுத்த காலத்தில் கூட இப்படியில்லை'' என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.



