காதலை நிராகரித்த மாணவிக்கு நேர்ந்த பரிதாப நிலை
லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவி ஒருவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஆகும். சந்தேக நபரினால் மாணவியை காயப்படுத்த பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் மாணவியின் கையடக்க தொலைபேசி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காதல் தொடர்பை முறித்துக் கொண்டதன் காரணமாக மாணவி மீது கத்தியால் குத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த அந்த மாணவி அன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக லபுதுவ தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபரால் இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மாணவி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மகிந்தவின் கணக்கிலிருந்து பல கோடி கொள்ளை! - நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபா அச்சிடும் அரசு (பத்திரிக்கை கண்ணோட்டம்) |





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
