இலங்கையில் ஜுலை முதலாவது வாரத்தில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நிலைமைய வலுப்படுத்தவும், 24 மணி நேர தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை இதனூடாக சீர்செய்ய முடியுமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜுலை முதலாவது வாரத்தில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கும் வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
எரிபொருள் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! இலங்கையில் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டம் |