கெஹல்பத்ர பத்மே விற்ற கைத்துப்பாக்கி.. புலனாய்வாளர்களிடம் சிக்கிய வர்த்தகர்
கெஹல்பத்ர பத்மேவிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கிய மினுவாங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறித்த கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரும் குற்றத்தடுப்பு மேல் மாகாணம் வடக்கு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போதே குறித்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
துப்பாக்கி விற்பனை
கெஹல்பத்ர பத்மே மினுவாங்கொடையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு கைத்துப்பாக்கி ஒன்றை விற்பனை செய்ததாக பெரும் குற்றத்தடுப்பு மேல் மாகாணம் வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி லின்டன் த சில்வாவுக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன் பின்னர் பொலிஸாரின் பரிசோதகர்கள் வர்த்தகரின் மினுவாங்கொடை இல்லத்தை பரிசோதனை செய்த போது கைத்துப்பாக்கி ஒன்றும் 13 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
'ஈநெட்டியா' என்பவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக அந்த வர்த்தகர் கெஹல்பத்ர பத்மேவுக்கு தெரிவித்துள்ளார்.அதையடுத்து பத்மே அவருக்கு கைத்துப்பாக்கியை வழங்கி அவரிடமிருந்து மூன்றரை இலட்சம் ரூபா பணமும் வாங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரும் குற்றத்தடுப்பு மேல் மாகாணம் வடக்கு பிரிவினர் நடத்தி வருகின்றனர்.