சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்காக 315 கிலோமீற்றர் தூரம் பயணித்த நபர்
ஹிக்கடுவை வர்த்தகர் ஒருவர் சமையல் எரிவாயு சிலிண்டரை தேடி 315 கிலோமீற்றர் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறிய வர்த்தகம் மேற்கொள்ளும் ஒருவர் தனது நாளாந்த நடவடிக்கைக்கு அவசியமான சிலிண்டரை தேடி 315 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார்.
குறித்த வர்த்தகர் சிலிண்டர் தேடி பொலநறுவை பிரதேசத்திற்கு சென்றள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் மிக சிறிய 3 சிலிண்டர்களுடன் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பெரிய சிலிண்டருக்கு ஈடாக 12 கிலோ எடையுள்ள இரண்டு சிலிண்டர்களையும், 5 கிலோ எடையுள்ள காலி சிலிண்டரையும் விற்பனையாளரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
315 கிலோ மீற்றர் பயணத்தின் இறுதியில் 37 கிலோ கிராம் அளவிலான சிலிண்டரை பெற்றுக் கொண்டவர் முச்சக்கர வண்டியில் மீண்டும் ஹிக்கடுவை நோக்கி சென்றுள்ளார்.
இவர் மிகப்பெரிய விடயத்தை சாதித்த மகிழ்ச்சியுடன் அவர் அங்கிருந்து சென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
