போதையில் அட்டகாசம் செய்த நபர் பொலிஸாரால் கைது (VIDEO)

Srilanka Police Trincomale
By Independent Writer Nov 24, 2021 07:02 PM GMT
Report

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி லிங்கநகர் பிரதேசத்தில் பிரதான வீதியில் குடிபோதையில் அட்டகாசம் செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குடிபோதையில் திருகோணமலை கண்டி வீதி பிரதான வீதியில் பயணித்த வாகனங்களுக்கு கற்களால் எறிந்து சேதப்படுத்தியதுடன், வீதியால் பயணித்த பயணிகளுக்கும் இடையூறு விளைவித்து வீதியால் பயணித்த பெண்கள் மீது முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இவ்வாறு குடிபோதையில் அட்டகாசம் செய்த குறித்த நபர் கந்தளாய் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் (30வயது)எனவும், சிகிச்சை ஒன்றிற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்ததாகவும்,இன்றைய தினம் நகரில் பல வர்த்தக நிலையங்களில் அட்டகாசம் செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குடிபோதையில் அத்துமீறி நடந்துகொண்ட நபரினால் அதிசொகுசு மோட்டார் கார் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களால் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



GalleryGalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US