யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்:நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கு முன்னால் உள்ள தொலைபேசி கடையினை உடைத்து அங்கிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் (20) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுண்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் கடந்த எட்டாம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு இருந்த பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ததுடன் திருடிய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 2022.12.05 வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
