இலங்கையில் இலக்கு வைக்கப்படும் முஸ்லிம் சமூகம்! அஹிம்சா விக்ரமதுங்க குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகள் வெளிப்படையாகவே சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இலக்குவைக்கும் வகையில் அமைந்திருப்பதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க (Ahimsa Vikramadunga) தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின சமூகத்தை இலக்குவைக்கும் விதத்திலான அரசாங்கத்தின் கொள்கைகள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற தொடர்ச்சியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளினால் இலங்கையின் முஸ்லிம் சமூகம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி மிகுந்த விசனத்திற்கும் கரிசனைக்கும் உரிய இந்தப்போக்கை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை அரசாங்கம் முடிவிற்குக்கொண்டுவர வேண்டும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்ட அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி அஹிம்சா விக்ரமதுங்க (Ahimsa Vikramadunga) அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இஸ்லாம் என்பது அமைதியை முன்னிறுத்துகின்ற ஓர் மதமாகும். இருப்பினும் இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகள் வெளிப்படையாகவே சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் பெண்களையும் இலக்குவைக்கும் வகையில் அமைந்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்துத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளால் அச்சமூகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய மோசமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
