சஜித்தின் இந்திய விஜயம் : ஹர்ஷ டி சில்வாவின் அதிர்ச்சியளிக்கும் உரை
எதிர்க்கட்சி தலைவரின் இந்திய விஜயம் தொடர்பில் தான் பத்திரிகையில் வெளியான செய்தியிலே அறிந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எனக்கு ஒன்றும் தெரியாது
இது உத்தியோகப்பூர்வ விஜயமா அல்லது தனிப்பட்டதா என தங்களுக்கு ஒன்றும் தெரியாது.பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்படதே நாமும் அறிந்த விடயமாகும்.விஜயத்தின் பலன் தொடர்பில் நாடாளுமன்ற குழுவிலும் ஒன்றும் பேசவில்லை.

இந்த விஜயம் தொடர்பில் நான் மட்டுமல்ல அநேகருக்கு இது தொடர்பில் தெரியாது. கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. நாடாளுமன்றத்தில் கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் எனது உறவினர் என்று கேலி செய்தனர்.
ஆனால் நான் ஒன்றும் தெரிவிக்கவில்லை.அவர் என்னுடைய உறவினரும் அல்ல என்பதே உண்மையாகும்.