டெல்லியில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பு! மோடிக்கு முன்னரே அறிந்த சஜித்..
டெல்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் என (நேற்று இரவு 9.07 மணிக்கு) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது எக்ஸ் தளத்தில் X பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் செய்தியை வெளியிட்ட நேரத்தில் கூட, இந்திய அரசாங்கம் குண்டுவெடிப்பை பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்திருக்கவில்லை.
சஜித்தின் எக்ஸ் தள பதிவு
சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தள X செய்தியில் பின்வருமாறு கூறியிருந்தார்.
"புது டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். பயங்கரவாதத்தின் கொடூரத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
Shocked to hear about the terror attack in New Delhi. All should unite to eradicate the scourge of terrorism. Our thoughts and prayers are with those who were impacted by this dastardly attack.
— Sajith Premadasa (@sajithpremadasa) November 10, 2025
இந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம்." இருப்பினும், அதற்குப் பின்னர் (நேற்று இரவு 9.42 மணிக்கு), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள X கணக்கில் இந்த 'குண்டுவெடிப்பு' குறித்து பின்வருமாறு ஒரு பதிவை வெளியிட்டார்.
மோடியின் எக்ஸ் தள பதிவு
'இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். இந்தியப் பிரதமரின் எக்ஸ் தள X செய்தி வந்த நேரத்தில், டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் என்பதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
சஜித் பிரேமதாச சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri