சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களோடு கட்சி தொடர்பு பேணாது – எரான் விக்ரமரட்ன
சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் தமது கட்சி தொடர்பு பேணாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை கடத்துதல், சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டதாக நிரூபிக்கப்படும் குற்றவாளிகளுடன் தமது கட்சி தொடர்பு பேணாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு எதிரான அனைத்து விதமான துன்புறுத்தல்களையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் நாடாளுமன்றில் தமது கட்சி இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் பொது இணக்கப்பாட்டை மீறும் தரப்புகளுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் இல்லத்தில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சட்ட ரீதியான நிரூபிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
