யாழ்.நகரை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கை தொடரும் - மணிவண்ணன்
யாழ்.நகரை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கை தொடரும் என யாழ்.மாநகரசபையின் முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில் சற்று முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டையும் ,யாழ்ப்பாண நகரையும் தூய்மையாக வைத்திருப்பது தவறா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது தவறு என்றால் அந்த தவறை தொடர்ந்தும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எங்களது சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களுடைய அரசாங்க உத்தியோகத்தர்களது கடமையில் பொலிஸார் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தேவையான சகல சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan