நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடி : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் (photos)
நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இன்று (23.01.2023) காலை தமிழகத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து நேற்று காலை பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையில் சென்றடைந்துள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212 இலங்கை
தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையில் சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் வாழ்வதற்கு வழியில்லை
விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய
பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில், தற்போது இலங்கை அரசிடம் போதிய
டொலர் கையிருப்பில் இல்லாததால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு
மக்கள் எரிபொருளுக்காக வீதியில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய
பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ்வதற்கு வழியின்றி
தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு, 5 பேரும் மண்டபம் அகதிகள்
முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
