இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள கோவிட் மரணங்களின் எண்ணிக்கை
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 28 பெண்களும், 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். நாளாந்த கோவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 14ஆம் திகதி முதல் நாளாந்தம் கோவிட் காரணமாக மரணிக்கின்றவர்களின் விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் 2419 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,667 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
