நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளாகிய மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கோவிட் -19 தொற்றினால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,அடால பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்படி,கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளதுடன்,கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam