கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் மேலும் ஐந்து கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது. 1. கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொவிட் நிமோனியா மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார். 2. வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் கடந்த 8ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார். 3. அலுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நிமோனியா, இரத்தம் விசமாகியமை மற்றும் சிறுநீரக கோளாறு என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார். 4. கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் திவுலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார். 5. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் இரணவில கோவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam