கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 காரணமாக உயிரிழந்த நான்கு பேரின் விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையில் கோவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக உயர்வடைந்துள்ளது.
1. கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட்-19 நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் பார்கின்சன் நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கடந்த 8ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். கோவிட்-19 நிமோனியா, உயர் குருதியழுத்தம், இருதய நோய் மற்றும் இரத்தம் குறைவடைந்த காரணத்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சுவாசப்பை பிரச்சினை, நீரிழிவு மற்றும் உயர் குறுதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட்-19 நிமோனியா, இரத்தம் விசமாகியமை மற்றும் அதிர்ச்சி காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
