கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அண்மைய வாரங்களில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்களின் எணிணக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தில் பதிவான தொற்று உறுதியாளர் எண்ணிக்கையானது அதற்கு முன்னைய வாரத்தை விடவும் 15 முதல் 20 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் 5 முதல் 6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் மாத்திரை பெற்றுக் கொண்டவர்களுக்கு நோய்த் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சாத்தியங்கள் வெகு குறைவு என சுகாதார அமைச்சின் கோவிட் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாகத் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகாரபூர்வ எண்ணிக்கையை விடவும் வெகுவாக அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் கோவிட்19 கட்டுப்பாடு தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
