இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.
வேல்ட் மீற்றர் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் அடிப்படையில் இலங்கையில் இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 298 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3 ஆயிரத்து 959 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 லட்சத்து 64 ஆயிரத்து 755 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அத்துடன் உலகம் முழுவதும் 192, 588, 448 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 41 லட்சத்து 54 ஆயிரத்து 837 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 175,865,265 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.