சீனாவுக்கு சிக்கலாகும் வடக்கு மாகாணம்! பாக்கு நீரினையில் சீனப் பெருஞ் சுவர் (VIDEO)
சீனா இலங்கையில் காலூன்றி இருப்பது வலுவடையும் வரை இந்தியாவுடன் பேச வேண்டும் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிவிட்டால், இந்தியா நோக்கி கல்லெறியப்படும. அதுவரை இலங்கை அரசியல்வாதிகளின் இந்த ராஜாதந்திர போக்கு தொடரும்.
சீனாவின் எதிர்பார்ப்பும் அதுவாக தான் உள்ளது. இலங்கையில் காலூன்றிய பின்னர் இலங்கை இந்தியாவுடன் எவ்வாறான உறவை வைத்து கொண்டாலும் அது சீனாவிற்கு கவலையில்லை.
தற்போது வடக்கு கிழக்கில் காலூன்ற வேண்டும் என்பது தான் சீனாவின் எதிர்பார்ப்பு.ஹம்பாந்தோட்டையை 99 வருடம் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதன் மூலம் தெற்கில் சீனா காலூன்றிவிட்டது.
சீனாவின் நோக்கம் வடக்கில் நிலைபெற வேண்டும். காரணம் வடக்கு தான் சீனாவிற்கு பிரச்சினை. வடக்கில் கிளர்ச்சி வெடித்தால் சீனாவால் நிலைபெறமுடியாது.”என கூறியுள்ளார்.
