அடுத்த ஆட்சி சஜித் தலைமையில்தான் மலரும்: திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை
"ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள்" என்று ஐக்கிய மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை நேற்றைய தினம் (26.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,"அடுத்த ஆட்சி சஜித் பிரேமதாச தலைமையில்தான் மலரப் போகின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு களங்கம்
இந்நிலையில், சஜித் பக்கத்திலிருந்து எவரும் அரசு பக்கம் செல்லமாட்டார்கள்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பொய்யான செய்திகளை அரச தரப்பினர் வெளியிடுகின்றனர்.எனினும், எமது மக்கள் விழிப்பாக தான் இருக்கின்றார்கள்.
மக்கள் ஆணை
இதற்கமைய எந்தத் தேர்தல் நடந்தாலும் மக்கள் ஆணை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கே கிடைக்கும். அதனால்தான் இந்த அரசு தேர்தலை நடத்தாமல் காலத்தைக் கடத்துகின்றது" என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




