எதிர்வரும் சில வாரங்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
எதிர்வரும் சில வாரங்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே சுகாதார தரப்பினர், பாதுகாப்புப் படையினர் வழங்கி வரும் ஆலோசனை வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார தரப்பினர், பாதுகாப்பு தரப்பு மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்தே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று தரப்பில் ஏதேனும் ஓர் தரப்பின் முயற்சி குறைந்தால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளின் கொள்ளளவு நிரம்பி வருவதாகவும் சுகாதார தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்த மரணங்களின் எண்ணிக்கை 40ஐ விட அதிகரித்துள்ளமை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் சிறுமியர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் பிள்ளைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி முன் இருப்பதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.