விருந்தகங்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் நீண்ட காலத்திற்கு நீடிக்காது: ஹரின் விளக்கம்
கொழும்பு நகர விருந்தகங்களுக்கு அண்மையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட
அறைகளுக்கான குறைந்தபட்ச விலை, நீண்ட காலத்திற்கு நீடிக்காது என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கு மாறாக விலையானது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குறைந்தப்பட்ச விலையை அகற்ற விரும்புவதை ஒப்புக்கொண்ட பெர்னாண்டோ, சுற்றுலா சந்தை நிலைபெறும் வரை மட்டுமே புதிய கொள்கை கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகள் மீதான விசாரணைகள்
இதேவேளை, 2023 அக்டோபர் 01ஆம் திகதி அறைகளுக்கான குறைந்தப்பட்ச கட்டணம்
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, விருந்தகங்களின் வருவாய் 25 சதவிகிதம்
அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இதே காலப்பகுதியில் கொழும்பு நகர விருந்தகங்களில் தங்குவோரின் எண்ணிக்கை 16 வீதத்தால் குறைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் குறைந்தப்பட்ச கட்டணம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மீதான விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை (04.12.2023) உயர்நீதிமன்றில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்: இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் சித்தார்த்தன் எச்சரிக்கை(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |