புதிய அட்டமஸ்தானாபதியாக பல்லேகம ஹேமரதன தேரர் தெரிவு
வடமத்திய மாகாணத்தின் புதிய அட்டமஸ்தானாபதியாக ருவன்வெலிசாய விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை அட்டமஸ்தான செயற்குழு நியமித்துள்ளது.
அட்டமஸ்தான குழுவின் தலைவர் கலாநிதி ஜனக அனுராத புலங்குளம தலைமையில் கூடிய செயற்குழுவில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர்
வடமத்திய மாகாண பிரதம சங்கநாயகம் அட்டமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய கலாநிதி பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர் தனது 69ஆவது வயதில் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி காலமானார்.
இதன்படி, வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரின் நியமனம் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் 11வது அட்டமஸ்தானாபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
