நாயாறு மீன்பிடித்துறை பகுதி முற்றாக முடக்கம்
தேசிய கோவிட் 19 தடுப்பு பாதுகாப்பு செயலணியினால் செம்மாலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடித்துறை பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயாற்றில் தென்னிலங்கை மீனவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாயாற்று பகுதியில் புத்தளம்,வெண்ணப்புவ,கறுக்குபனையினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பருவகால கடற்தொழில் நடவடிக்கைக்காக வந்துள்ளார்கள். இவர்கள் தொடர்பில் எந்தவித பதிவுகளும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கோ அல்லது வேறு அரச திணைக்களத்திற்கோ தெரியாத நிலையில் இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற கண்காணிப்பு அரச திணைக்களங்கலோ அல்லது பாதுகாப்பு தராப்பினராலோ முன்னெடுக்கப்படவில்லை.
இங்கு வாடிகள் அமைத்து நெருக்கமாக வசித்து வருபவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிலையினை நேற்று சுகாதார அதிகாரிகள் சென்று பார்வையிட்டு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத நிலையினை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும் என்றும், நாயாற்று பகுதியில் வாடி அமைத்து தொழில் செய்து வருபவர்களின் பகுதியினை முடக்குமாறும் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
