கொழும்பு காலி முகத்திடலில் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் (Video)
காலி முகத்திடலில் தொடர்ந்து 7வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த நபர் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மஹிந்தானந்த உள்ளிட்ட குழுவினருக்கு ஆதரவாக பேரணியாக சென்ற நபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று அவரை தாக்க முயற்சித்த போது தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.
மன்னித்து விடுமாறு கூறினால் குறித்த நபர் ஏதோ தவறு செய்து வருகின்றார், உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என இளைஞர்கள் கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும் அவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.


பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
