லசந்த விக்ரமசேகர கொலை பின்னணியில் நெருங்கிய நண்பர்: சந்தேகம் வெளியிட்ட பொலிஸார்
பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் என்ற பாதாள உலகத் தலைவர் துபாயில் மறைந்திருக்கும் டுபாய் லொக்கா என்ற பாதாள உலகக் குற்றவாளிக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தப் பணம், டுபாயில் மறைந்திருக்கும் ‘ரன் பாட்டியா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த கொலையை செய்த சந்தேநபருக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரக நாணயக்காரவின் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் மிதிகம ருவானின் உத்தரவின் பேரில் டுபாய் லொக்காவினால் திட்டமிடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
டுபாய் லொக்கா மிதிகம ருவானின் பாதாள உலகக் கும்பலின் சிறந்த உதவியாளராக மாறிவிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக நடவடிக்கைகள்
மிதிகம ருவானின் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை டுபாய் லொக்கா மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மிதிகம ருவானின் அறிவுறுத்தலின் பேரில், டுபாய் லொக்கா தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல குற்றங்களுக்குப் பின்னால் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிதிகம சூட்டி என்பவர் கொலைக்கு உத்தரவிட்டதாக ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், மிதிகம சூட்டி தற்போது ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிதிகம சூட்டி லசந்த விக்ரமசேகரவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.
மிதிகம ருவான் இந்த கொலையைச் செய்து, அதற்கு மிதிகம சுட்டி மீது பழி சுமத்த திட்டமிட்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |