பெற்ற மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் வீசி சாகடித்த தாய்! வட்டக்கச்சியில் கொடூரம்
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் தாயார் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.
இந்தக் கொடூரத்தில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள்ளேயே இன்று மாலை தனது பிள்ளைகளைப் போட்ட தாயார் தானும் கிணற்றில் குதித்திருந்தார்.
இதன்போது தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டார்.
அதேவேளை, இரண்டு வயது ஆண் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டடார். மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
ஏனைய இரு பெண் பிள்ளைகளைத் தேடும் பணி இடம்பெற்றது. அவர்கள் இருவரும் இன்றிரவு சடலங்களாக மீட்கப்பட்டனர். மூன்று பிள்ளைகளின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருத்திகா (வயது 08), அட்சயா (வயது 05) மற்றும் ரெனேஜன் (வயது 02) ஆகிய குழந்தைகளே தாயாரின் வெறியாட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
