வீழ்ந்து வெடித்தால் காதுகளிலும் கண்களிலும் இரத்தம் வடியும்! ஈரானை அச்சப்படுத்தும் அமெரிக்காவின் அதிசயக் குண்டு!
'The mother of ALL Bombs' - அதாவது 'குண்டுகளுக்கெல்லாம் தாயான குண்டு' என்று அந்தக் குண்டைக் குறிப்பிடுகின்றார்கள்.
அமெரிக்கா இதுவரை தயாரித்துள்ள குண்டுகளிலேயே மிகப் பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடிய குண்டு என்று அந்தக் குண்டு பற்றி அச்சத்துடன் கூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
உலகத் தலைவர்களாகட்டும், அமெரிக்காவின் இலக்குகளாக்கப்பட்டுள்ள புள்ளிகளாகட்டும்.. அவர்கள் எங்கே எத்தனை ஆழத்தில் மறைந்து பதுங்கிக்கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் இந்தக் குண்டை நினைத்து இரவு நித்திரையைத் தொலைத்துவிட்டு தவித்தபடிதான் வாழ்வார்கள் என்று- அந்தக் குண்டு பற்றி வர்ணிக்கின்றார்கள் சில எழுத்தாளர்கள்.
‘எங்களுடைய நாட்டில் உள்ள இலக்குள் மீது இந்தக் குண்டு வீசப்பட்டுவிடக்கூடாது’ என்று உலகின் அத்தனை நாடுகளும் கடவுளிடம் பிராத்திக்கின்ற குண்டுதான் அது என்று சுட்டிக்காண்பிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
ஈரான் மீது வீசப்படலாம் என்று கூறப்படுகின்ற அமெரிக்காவின் அந்த அதிசயக் குண்டு பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: