நாலாபுறம் இருந்தும் உக்ரைனை நோக்கி வரும் அதி நவீன இராணுவ உதவிகள் - வாங்கி கட்டிக் கொள்வாரா புட்டின்? (Photos)
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் பெயரளவில் மாத்திரம் உக்ரைனுக்கு உதவி வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட பல மேற்குலக நாடுகள் தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை வேகப்படுத்தியுள்ளன.
ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிராக உக்ரைன் இராணுவம் கடும் பதில் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தும், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் நோக்கமாக இருக்கின்றது.
இதனடிப்படையில், ஜேர்மனி நேற்றைய தினம் ஆயிரம் யுத்த தாங்கி அழிப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் விமான அழிப்பு ஏவுகணைகளை உக்ரைக்கு வழங்கியுள்ளது.
போர் நடைபெறும் பிராந்தியங்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில்லை என்ற ஜேர்மனியில் நடைமுறையில் இருந்த சட்டத்தை நீக்கி, ஜேர்மனி இந்த ஆயுதங்களை வழங்க முடிவு செய்தமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை கடந்த சனிக் கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த பெல்ஜியம், உக்ரைன் இராணுவத்தினருக்கு 2 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், 3 ஆயிரத்து 800 மெற்றி தொன் எரிபொருளை வழங்குவதாக தெரிவித்தது.
அதேவேளை ஸ்னைப்பர் துப்பாக்கிகள், இராணு தலை கவசங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ள நெதர்லாந்து, 200 ஸ்டிங்கர் விமான அழிப்பு ஏவுகணைகளை துரிதமாக உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே செக் குடியரசு 30 ஆயிரம் கைத்துப்பாக்கிகள், 7 ஆயிரம் தாக்குதல் ரைபில்கள், 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், ஒரு மில்லியன் தோட்டக்களை வழங்கியுள்ளது.
அதேவேளை ரஷ்யாவின் மோசமான ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு எதிராக போரிட அமெரிக்கா, 350 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மேலதிக இராணுவ தளபாடங்களை வழங்கும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் அட்டனி பிலிங்கன் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதனை தவிர உக்ரைனுக்கு கனர ஆயுதங்கள் உட்பட மேலதிக இராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கிறீஸ், உக்ரைன் அரசு விடுத்த கோரிக்கைக்கு அமைய போலாந்தின் ஊடாக இரண்டு சீ.130 விமானங்களை வழங்க இணங்கியுள்ளது.
போத்துகல் நாடும் உக்ரைனுக்கு இராணுவ விநியோகங்களை வலழங்க உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தோட்டக்கள், இராணுவ தலை கவசங்கள், நைட் விஷன் கண்ணாடிகள், கைக்குண்களை வழங்க உள்ளதாக போலாந்து அறிவித்துள்ளது.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
