மஹிந்தவின் பெருந்தொகை பணத்திற்கு என்ன நடந்தது?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இணையத்தங்கள் அவ்வாறு செய்திகளை வெளியிடுவதாகவும் அதற்கு பதிலளிக்க தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான திருட்டுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவது இணையத்தளங்களாகும். இணையத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளித்தால் தினமும் அதனை செய்ய நேரிடும் என அவர் கூறியுள்ளார்.
வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமரின் கணக்கிலிருந்து பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், அந்த பணத்தை பிரதமருக்கு நெருக்கமானவர்களுடன் களியாட்ட நிகழ்வுகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யார் கூறுவது உண்மை? யாழில் பாடையில் ஏற்றப்பட்டது 13வது திருத்தம் - (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan