விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ள பணம்(Photo)
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் அதிரடி நடவடிக்கையில் இன்றைய தினம்(22.09.2022) ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான திருட்டு பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பவம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்த ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு தளபாட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த வீடானது வேறு ஒருவரின் கண்காணிப்பின் கீழ் காணப்பட்டுள்ளது.
வீட்டினை பராமரிப்பவர் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வந்து வீட்டினை பார்வையிடுவார்.
பொலிஸ் முறைப்பாடு

இந்நிலையில் களவு இடம்பெற்றதையடுத்து வீட்டினை பராமரிப்பவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைப்பாடு காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் அதிரடி செயல் அதன்படி தீவிர நடவடிக்கையில் களமிறங்கிய காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் புத்தூர், அச்செழு மற்றும் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரை இன்றையதினம் கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் திருட்டு பொருட்களும் அச்சுவேலி
பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர்
சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri