இந்தியாவின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நாணய நிதியம்
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழியை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் ஏனைய கடன் உரிமையாளர்களிடமும் இப்படியான அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளதாக நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் அர்ப்பணிப்பை வரவேற்கும் நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் அனுசரணை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை அரசின் கடன்களின் ஸ்திரத்தன்மை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்காக இந்தியாவின் நிதி நிலை உறுதிமொழி மற்றும் கடன் சலுகையை வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதை நிதியத்தின் முகாமைத்துவத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதை உறுதிப்படுத்துவதாக நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தியாவின் அர்ப்பணிப்பை அன்புடன் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பதில் போதுமான உறுதிமொழி அல்ல
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு சம்பந்தமாக சீனாவும் இலங்கை அடிப்படையான பதிலை வழங்கியுள்ளது. எனினும் இது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்கு போதுமான மட்ட உறுதிமொழி அல்ல என இந்த செயற்பாடுகள் தொடர்பான ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடயே சீனாவின் பதில் தொடர்பில் சர்வதேச நாணய நிதியமும் எதனையும் குறிப்பிடவில்லை.
இந்தியா வழங்கியுள்ள இணக்கம் காரணமாக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள ஒத்துழைப்பு வலுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.